• May 20 2024

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் மற்றுமொரு முக்கிய நடிகை- கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் கதாநாயகனாக சித்து என்பவர் நடித்து வருவதோடு கதாநாயகியாக தற்பொழுது ரியா என்பவர் நடித்து வருகின்றார்.

மேலும் திருமணம் முடித்த பெண்கள் தமது வாழ்க்கை லட்சியங்களை நிறைவேற்ற எப்படி போராடுகின்றார்கள் என்பதை இந்த சீரியல் எடுத்துக் காட்டுவதால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

அத்தோடு இந்த சீரியலின் ஆரம்பத்தில் கதாநாயகியாக ஆல்யா மானசா நடித்திருந்தார். இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தினாலேயே சீரியலை விட்டு விலகினார். இவரைத் தொடர்ந்தே ரியா நடித்து வருகின்றார்.

இந்நிலையில், இவரை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலகபோவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கூட, ராஜா ராணி சீரியலுக்காக விஜய் டெலிவிஷன் விருதை வென்ற நடிகை அர்ச்சனா, ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக வெளிவந்துள்ள செய்தி அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement