• May 20 2024

மேடையை அதிர வைத்த ராகவா லாரன்ஸ் - ஸ்ரீதர் இருவரின் கலக்கல் டான்ஸ்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவில் அசாத்தியமான நடன திறமை கொண்டவராய் இருந்து பல லட்ச ரசிகர்களின் மனதை கவர்ந்து இன்று இயக்குநராகவும் தயாரிப்பாளரகாவும் நடிகராகவும் தொடர் வெற்றிகளை பெரும் கலைஞராய் இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ் 

 திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பல ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாள் தோறும் பாடுபடும் மாமனிதராகவும் சமூகத்தில் இயங்கி வருகிறார். 

அதனாலே இவரை மக்களின் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர். 

தற்போது ராகவா லாரான்ஸ் அவர்கள் சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2, அதிகாரம் மற்றும் லோகேஷ் கனகராஜ் எழுத்தில் ரத்னா இயக்கவிருக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.இதனிடையே ராகவா லாரன்ஸ் நடிப்பில் கதிரேசன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ‘ருத்ரன்’ திரைப்படம் இன்று தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது. 

இப்படம் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் கொண்டாடும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர்  சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டார்.

அதில் சிறப்பு தொகுப்பாக ராகவா லாரன்ஸ் அவர்களை சந்திக்க பிரபல நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர்  அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் அவர்களும் கலந்து கொண்டனர்.

அதில் அவர்கள், "நான் லாரன்ஸ் மாஸ்டர் னா அப்படி பயங்கரமான ரசிகன். எனக்கு அவ்ளோ பிடிக்கும். அவர் ஆடுறது தனி ஸ்டைல் இருக்கும். அவர் அந்த தொழிலுக்கு கொடுக்கும் மதிப்பு அப்படி இருக்கும்..  'ஜொர்த்தாலா' பாடலுக்கு நிறைய சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். அந்த பாடல் முடிந்ததும் எல்லொரும் என்னை அழைத்து நன்றி சொன்னார்கள்.  ஜொர்த்தாலா பாடலுக்கு மாஸ்டர் ஆடிட்டு இருக்கும் போது நான் கத்திட்டே ஓடிட்டேன். ஏன்னா எனக்கு அது ரொம்ப பிடிச்சது. அதுல ஒரு வைப் இருந்தது.  எல்லாம் பட்டைய கிளப்பிச்சு..  அந்த பாடல் திரையரங்கில் கிழிய போகுது.. கஷ்டப்படுறவங்களுக்கு உதவி பண்ணுங்க னு சொல்றதுதான் மாஸ்டர்.." என்றார் ஸ்ரீதர் மாஸ்டர். அதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ,

“நான் சின்ன வயசுல நிறைய விரதம்லாம் இருத்திருக்கேன்.‌அம்மா பழக்கப்படுத்தினது. அப்படி சாப்பிடமா இருக்கறதுனால கடவுள் பிடிக்குதுனு அர்த்தமில்லை.. இதெல்லாம் அம்மா பழக்கப்படுத்துனது.  சமூதாயம் நமக்கு சொல்லி கொடுத்தது.  சாமி எப்பவும் இதெல்லாம் சாப்பிடாத னு சொல்லாது.  என்ன காரணம் னா மனசார கடவுளிடம் ஒன்றிருக்கியோ அதான் கடவுள். சாமியை வெளியே தேடுவதை விட உள்ளையே தேடுவது அப்போதான் சாமி நமக்கு நெருங்கி வரும்". என்றார் ராகவா லாரன்ஸ்.

மேலும் மாஸ்டர் ரசிகர்கள் நடன கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் நடன திறமையை ராகவா லாரன்ஸ் முன்னிலையில் ஆடி காட்டினார்.


Advertisement

Advertisement