• Jan 18 2025

கதவை திறக்க காத்திருந்த அதிர்ச்சி! அம்பலமானது ரோகிணியின் ரகசியம்! அடித்து விரட்டிய விஜயா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

முத்து மீனாவிடம் கிருஷ் விஷயத்தில் ரகசியம் இருக்கு அவனை சுற்றி இருக்குறவங்க கிட்ட ரகசியம் இருக்கு. இத கண்டு புடிக்கணும்,கிரிஷ் ஓட பாட்டி ஊருக்கு போயிட்டு அத பத்தி விசாரிக்கணுமா என்று சொல்கிறார். இதனை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். 


அன்று இரவு விஜயா ரோகிணி கழுத்தை பிடித்து இழுத்து வந்து வெளியே தள்ளுகிறார். ஏற்கனவே புள்ளைய பெத்துட்டு இங்க வந்து மலேஷியா மாமா கதவிட்டு என் புள்ளைய கட்டிகிட்டியா நீ இனி இந்த வீட்டுல இருக்காதா என்று சொல்கிறார். ரோகிணி அழுது கொண்டே மனோஜிடம் கெஞ்சுகிறார். மனோஜ் உன்னோட வாழ்த்தேன்னு நினைக்கவே அருவெறுப்பா இருக்கு என்று சொல்கிறார். விஜயா ரோகிணியை வெளியே பிடித்து தள்ளுகிறார். அத்தோடு கனவு கலைந்து திடுக்கிட்டு முழிக்கிறார் ரோகிணி. 


மீனாவை முகம்தெரியாத நபர் ஒருவர் பின்தொடர்ந்து வருகிறார். இதனை பார்த்த மீனா பயந்து வேகமாக போகிறார் அந்த நபர் பின்னாலே துரத்தி வருகிறார். வித்தியா வீட்டில் ரோகிணி கனவில் நடந்ததை யோசித்து கொண்டு இருக்கிறார். வித்தியா முத்துவின் போனில் உள்ளதை பார்த்து என்ன ரொமேன்டிக்கப்பல்ஸ் என்று சொல்லி கொண்டு இருக்கிறார். முத்து போனை மறைத்து வைக்குமாறு சொல்கிறார் ரோகிணி. இந்த போனை தேடி மீனாவா வர போரால் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மீனா கதவை தட்டுகிறார். கதவை திறந்த இருவரும் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள். 


மீனா போனை கவனிக்கவில்லை சிறிது நேரம் இருந்து விட்டு அந்த நபர் சென்ற பின்னர் வீட்டுக்கு செல்கிறார். வித்தியாவை அடித்து விட்டு ரோகிணி போனை வாங்கிக்கொண்டு கடலில் போடுவதற்கு செல்கிறார். அதற்கு செல்லும் வழியில் அவரது தோழியின் செருப்பு அருந்து போய்விடவே, தாத்தாவிடம் செருப்பு தைக்க வருகின்றார். அப்பொழுது போனை கீழே போட்டுவிட்டு செல்கின்றார் ரோகிணி. முத்துவிடம் மீனாவை கரெக்ட் பண்ண ஐடியா கேட்கிறார் அந்த நபர் அந்த பெண் யார் என்றே தெரியாமல் ஐடியா கொடுக்கிறார் முத்து. 

Advertisement

Advertisement