• Dec 05 2024

சூர்யா படத்தை முறியடித்த..புஷ்பா 2 vs கங்குவா காத்திருக்கும் சினிமா மோதல்!

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம், கடந்த நவம்பர் 14 அன்று உலக அளவில் வெளியாகி, வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. திரையரங்குகளில் சுமார் 11,500 ஸ்க்ரீன்களில் வெளியான இப்படம், உலகளவில் ₹200 கோடி ரூபாயை தாண்டி வெற்றிகரமாக ஓடியது. கங்குவா திரைப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருப்பதுடன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் அசத்தலான பணியால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியது.


சூர்யா தனது படத்திற்காக இரண்டரை ஆண்டுகளாக நீடித்த உழைப்பை பாராட்டிய ரசிகர்கள், திரைக்கதையின் நீளத்தை விமர்சித்தாலும், அவரது நடிப்பை வானளவில் பாராட்டினர். மேலும், திரைப்படம் விரைவில் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியிடப்பட இருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சூழலில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம், டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியானது, அதன்பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த அல்லு அர்ஜுன், தனது முழு நேரத்தையும் இரண்டாம் பாகத்திற்காக செலவிட்டார்.


புஷ்பா 2 திரைப்படம், தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பன்மொழிகளில் 12,000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, கங்குவா திரைப்படம் கொண்ட 11,500 திரையரங்குகளை முறியடிக்கும் சாதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மலையாள நடிகர் பஹத் பாசில் மற்றும் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தானா உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement