• May 20 2024

அனைவருக்கும் நன்றி கூறிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி- இது தான் காரணமா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. எப்போதும் போல் இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதனை படமாக்கியுள்ளார் வெங்கட் பிரபு. கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

அந்தவகையில் இந்த படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதே போல மாநாடு திரைப்படம் ஓடிடி தளத்தின் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் மாநாடு திரைப்படத்தின் மொத்த வசூல் 177 கோடி என்று தெரிவித்துள்ளார்.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என அணைத்து தரப்பினருக்கும் இந்த படம் நல்ல இலாபத்தை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்றும் சுரேஷ் காமாட்சி தந்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement