• Jan 18 2025

ஓரளவுக்கு தான் பண்ண முடியும் ஓவராக பண்ண முடியாது- கிளாமராக நடிப்பது குறித்து ஓபனாகப் பேசிய ப்ரியங்கா மோகன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ‘டாக்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர், பிரியங்கா அருள் மோகன். இந்த படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த ஜோடி ரசிகர்களுக்கு பிடித்துப்போக, அடுத்து 2022ஆம் ஆண்டில் அவருடனேயே‘டான்’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்.

 சூர்யாவுடன் ‘எதற்க்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து பல தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்கள்தான் இவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது என்றாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பினை அளித்ததால் தொடர்ந்து கோலிவுட் படங்களிலேயே கமிட் ஆகி வருகின்றார். 


தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாகவுள்ளது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா மோகன் கிளாமர் ரோலில் நடிப்பதை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், என்னால் ஓரளவிற்கு மேல் தோலை காண்பித்து நடிக்க முடியாது. எல்லையை தாண்ட மாட்டேன். நான் ஏற்று நடிக்கும் ரோலில் இருக்கும் கிளாமர் யாரும் முகம் சுழிக்க முடியாத அளவு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement