• Apr 15 2026

ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து ப்ரியா விலகுகின்றாரா?- பிரபல நடிகருடன் கிடைத்த சூப்பர் வாய்ப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட ஸ்வாதி, கன்னட திரைப்படங்களின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர். கன்னடத்தில் சுமார் 4 திரைப்படங்களில் ஸ்வாதி கலக்கியுள்ளார். 

திரைப்படங்களில் ஸ்வாதிக்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் அதே கன்னட சினிமாவில் 'யாரிவலு' என்கிற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தவர். கன்னட சின்னத்திரையில் கலக்கிய ஸ்வாதி பின்னர் தமிழ் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 


அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2 என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.இதில் இவர் நடிக்கும் ப்ரியா என்னும் கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.


இந்த நிலையில் இவர் தற்பொழுது கார்த்தி நடிக்கும் 27 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனால் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருவதோடு ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து விலகப்போகின்றாரா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement