• Jan 15 2025

பிரேம்ஜிக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்.. மாமியாரின் அதிர்ச்சி பேட்டி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

ஆரம்பத்தில் பிரேம்ஜியின் பேட்டியை பார்த்துவிட்டு அவருக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன் என்று கூறியதாகவும் ஆனால் தற்போது தான் அவர் எவ்வளவு நல்லவர் என்று தெரிய வந்துள்ளது என்றும் பிரேம்ஜியின் மாமியார் ஷர்மிளா சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். 

பிரேம்ஜி மாமியார் மசாலா என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசாலா நல்லபடியாக விற்பனையாகி வருவதாக ஷர்மிளா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். 

என் பொண்ணுக்கு கல்யாணம் ஆனவுடன் மசாலா கொடுத்து அனுப்பினேன் என்றும் அதை சாப்பிட்டு பார்த்த பிரேம்ஜி மிகவும் நன்றாக இருக்கிறது, இதையே நீங்கள் பிசினஸ் ஆக பண்ணலாம் என்று அவர் கூறிய ஐடியாவில் தான், தற்போது நான் இந்த முயற்சியை எடுத்திருக்கிறேன் என்றும், அதனால் தான் பிரேம்ஜி மாமியார் மசாலா என்ற பெயரையும் வைத்திருக்கிறேன் என்றும் ஷர்மிளா கூறினார். 

ஆரம்பித்தில் பிரேம்ஜியின் பேட்டிகளை பார்த்து இவருக்கு பெண் தர மாட்டேன் என்று கூறினேன் என்றும் ஆனால் பிரேம்ஜி தம்பி ரொம்ப நல்லவர் என்பது பழகி பார்க்கும் போது தான் தெரிகிறது என்றும் அவர் கொடுத்த ஊக்கத்தினால் தான் இந்த பிசினஸை ஆரம்பித்து உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். 

மசாலாவுக்கு தேவையான எல்லா பொருட்களையும் நானே நேரில் விவசாயிகளிடம் சென்று வாங்குகிறேன் என்றும் தரம் குறையாதவாறு பார்த்துக் கொள்வேன் என்றும் இதையெல்லாம் என்னுடைய மாமியாரிடம் இருந்துதான் நான் கற்றுக் கொண்டேன் என்றும் ஷர்மிளா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement