• Sep 20 2024

போனியாகாமல் இருக்கும் பிரபுதேவாவின் 8 படங்கள்.. 2 படங்களை ஓடிடியில் தள்ளிவிட்டதால் நிம்மதி..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா நடிப்பில் உருவாகிய எட்டு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் அந்த படத்தின் வியாபாரம் இன்னும் ஆகவில்லை என்பதால் ரிலீஸ் ஆகாமல் இருப்பதாகவும், இதையடுத்து பிரபுதேவாவே களத்தில் இறங்கி தற்போது அதில் இரண்டு படங்களை ஓடிடியில் விற்பனை செய்ய உதவி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனரான பிரபுதேவா கடந்த சில ஆண்டுகளாக அதிக படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றும் அதனால் அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் வியாபாரம் ஆகாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ’பேட்ட ரேப்’, ‘பிளாஷ்பேக்’, ‘முசாசி’, ‘வுல்ப்’ ஆகிய சில தமிழ் படங்கள், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பிரபுதேவா  நடித்து முடித்துள்ளார். ஆனால் அனைத்து படங்களுமே தற்போது ரிலீசுக்கு தயாராக இருந்தும் எந்த படமும் இன்னும் வியாபாரமாக இல்லை என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவரே இரண்டு படங்களை ஓடிடி நிறுவனத்திடம் பேசி விற்பனை செய்து விட்டதாகவும் அந்த இரண்டு படங்களையும் அமேசான் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்து சில படங்களையும் அவர் விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தன்னுடைய படங்கள் விற்பனையாகவில்லை என்றதும் பிரபுதேவா இறங்கி வந்து வியாபாரத்தில் உதவி செய்வதை பார்த்து கோலிவுட் திரை உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

Advertisement

Advertisement