• Sep 19 2024

ரூ.1000 கோடி வசூல் செய்த படத்தின் ஹீரோவை தட்டித்தூக்கிய ஏஜிஎஸ்.. இன்னொரு ‘கோட்’ படமா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!


ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த நடிகரின் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎஃப்’ என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரூபாய் 250 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் ரூ.1200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 100 கோடி தான் என்பது பலர் அறிந்ததே.

 இந்த நிலையில் யாஷ் தற்போது ’டாக்ஸிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவரே தயாரித்து வரும் இந்த படம் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, யாஷ் சகோதரியாக நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் முதல் டெக்னீஷியன் வரை அனைத்து நபர்களையும் நானே தேர்வு செய்வேன் என்று யாஷ் நிபந்தனை விதித்ததாகவும் அந்த நிபந்தனைக்கு ஏஜிஎஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதன்பின் அதிகாரபூர்வமாக இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement