• Jan 19 2025

திகில் நிறைந்த ஹாரர் படத்தில் நடிக்கும் பிரபாஸ்! போஸ்டரே சும்மா கதிகலங்குதே..!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கிய நடிகராக திகழ்பவர் தான் பிரபாஸ். இவருக்கென்றே தனி இடம் காணப்படுகின்றது. நடிகர் பிரபாஸ் இன்றைய தினம் தனது 45 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். 

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பிரபாஸ். அப்போது அவருக்கு 24 வயது. அதிலிருந்து தற்போது மட்டும் சுமார் 22 ஆண்டுகளில் 23 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். குறித்த படங்களின் ஊடாக ஒட்டுமொத்த சினிமாவையுமே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

ஆரம்ப காலத்தில் காதல் படங்களில் நடித்த பிரபாஸ், அதன் பின்பு ஆக்சன் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக் மிகவும் பிரபலமானது. அது தன்னை ஒரு முழுமையான ஆக்சன் ஹீரோவாகவே மாற்றினார். இவருடைய பதினைந்தாவது படமான ரெபில் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால் இவர் ரெபில் ஸ்டார் எனவும் அழைக்கப்படுகின்றார்.


இதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் மற்றும் பாகுபலி படத்தின் இரண்டாவது பாகம் என 2 படங்களுமே தெலுங்கு சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் இவரது அடையாளத்தை காட்டியது. இந்த படத்திற்கு இவர் காட்டிய உழைப்பிற்கான பலன் கிடைத்தது.

இந்த நிலையில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராஜாசாப் படத்தின் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். அதில் "ஹாரர் தான் புதிய நகைச்சுவை" என குறிப்பிடப்பட்டுள்ளதோடு குறித்த போஸ்டரில் வயதான கேரக்டரில் பிரபாஸ் காணப்படுகின்றார். இந்த படம் திகில் நிறைந்த நகைச்சுவை படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement