• May 15 2026

வெள்ளித்திரையில் சந்திப்போம்..- விமர்சனங்களுக்கு நடுவே பூஜா ஹெக்டேவின் பதிவு!

shali / 1 month ago

Advertisement

Listen News!

ஜனநாயகன் திரைப்படம், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருந்தாலும், சென்சார் பிரச்சனைகள் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


முதலில், படத்தின் சில முக்கிய காட்சிகள் இணையத்தில் கசிந்தது. இதை தொடர்ந்து, மேலும் பெரிய அதிர்ச்சியாக முழு திரைப்படமே இணையத்தில் வெளியானது. இந்த சம்பவம் படக்குழுவுக்கு மட்டுமல்லாமல், முழு திரையுலகிற்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். “அன்பான ரசிகர்களே, உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க எங்கள் குழு பல மணி நேர உழைப்பையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் தியாகம் செய்துள்ளது. அப்படிப்பட்ட படம் கசிந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது ஒவ்வொரு கலைஞருக்கும் கிடைக்க வேண்டிய கௌரவத்தை பறித்துவிட்டது.” என்று கூறியுள்ளார்.

மேலும், விஜய்யின் கடைசி படமாக பார்க்கப்படும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் கொண்டாட வேண்டும் என்றும், அதற்காக படம் வெளியாவகும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். திருட்டுத்தனமான முறைகளை ஆதரிக்க வேண்டாம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மொத்தத்தில், இந்த சம்பவம் சினிமா துறையில் piracy பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டும் ஒரு முக்கிய உதாரணமாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement