• Apr 26 2024

பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?- சோழர் படைக்கு என்னாச்சு?- வெளியாகிய பாக்ஸ் ஆபிஸ் விபரம்

stella / 11 months ago

Advertisement

Listen News!


மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியான நிலையில், நேற்று பொன்னியின் செல்வன் 2 ரிலீஸானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.

அதேநேரம் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு காரணமாக முதல் வாரத்தின் டிக்கெட்டுகள் முழுவதும் 80 சதவீதம் வரை புக்கிங் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய இரண்டு நாட்களில், உலகம் முழுவதும் 10 முதல் 15 கோடி ரூபாய் வரை டிக்கெட்டுகள் ரிசர்வ் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது முதல் நாள் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன்படி, பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மொத்தம் 60 முதல் 65 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட குறைவு எனலாம். பொன்னியின் செல்வன் முதல் பாகம் முதல் நாளில் மட்டும் 80 கோடி வரை கலெக்‌ஷன் செய்திருந்தது. இதன்மூலம் முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு, இரண்டாம் பாகத்திற்கு இல்லை என்றே தெரிகிறது.

பொன்னியின் செல்வன் 2 தமிழ்நாடு முழுவதும் 22 முதல் 26 கோடி வரை வசூலித்துள்ளதாம். அதேபோல், தெலுங்கில் 3 முதல் 4 கோடி வரை மட்டும் கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 35 கோடி வரை வசூலித்திருக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இந்தியா தவிர்த்து உலகின் மற்ற நாடுகளில் 25 முதல் 30 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் கிடைத்துள்ளதாம். ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 65 கோடி ரூபாய்க்குள் தான் வசூல் இருக்கும் எனவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லா வகையில் முதல் பாகத்தை விட வசூலில் குறைந்தே உள்ளது பொன்னியின் செல்வன் 2. இதனால் வரும் நாட்களில் இன்னும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேநேரம் UAE, சிங்கப்பூர், மலேசியாவில் பாக்ஸ் ஆபிஸில் டாப் 10ல் இடம் பிடித்துள்ளது பொன்னியின் செல்வன் 2. அதேபோல் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் 3ம் இடத்தில் உள்ளதாம்  என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement