• Sep 13 2024

அசோக் செல்வன் திருமணத்திற்காக கனடாவில் இருந்து பறந்து வந்த முன்னாள் காதலி..? வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அசோக் செல்வன். இவர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான சூது கவ்வும்' படத்தின் மூலம் ஒரு நடிகராக அறிமுகமானவர். 


இதனையடுத்து 'பீட்சா 2 வில்லா', தெகிடி, சவாலே சமாளி, 144, மன்மத லீலை, ஹாஸ்டல், கூட்டத்தில் ஒருவன், ஓ  மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், போன்ற பல படங்களில் நடித்தார்.


இந்நிலையில் இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய அருண் பாண்டியன் மகளும், இளம் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை நேற்றைய தினம் திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


அந்தவகையில் அசோக் செல்வன் திருமணத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பிரகதியும் கனடாவில் இருந்து வந்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து காதல் கிசுகிசுவில் சிக்கி இருந்தமை நம் அனைவருக்கும் தெரியும். பின்னர் ஆனால் இருவரும் நண்பர்கள் தான் என்று கூறப்பட்டது.


எது எவ்வாறாயினும் அசோக் செல்வன் திருமணத்தில் பிரகதி கலந்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement