• May 21 2024

ஹாலிவுட் தரத்தில் உருவாகும் விடாமுயற்சி! இறுதியில் விவேகம் 2 போல வராம இருந்தா சரியென புலம்பும் ரசிகர்கள்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

 'விடாமுயற்சி' படப்பிடிப்பு பல சிக்கல்களை கடந்து பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. தனித்துவ இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு இப்போதே ஹைப் எக்கச்சக்கமாக இருக்கின்றது..மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.'விடாமுயற்சி' படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் இணைந்து  நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர், அஜர்பைஜான் என  ஏகப்பட்ட இடங்களுக்கு போய் பல பில்டப்புகளை  கொடுப்பதுமாக இருந்து விட்டு, இறுதியில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல அவுட்புட் இல்லாமல் போகும் நிலை தொர்கின்றது. அந்த எதிர்பார்ப்பினாலையே ரசிகர்கள் அதிக பணம் கொடுத்து ஏமாந்து போவதாக கடுப்பில் உள்ளனர்.


 அத்துடன், விடாமுயற்சி படம்  நடிகர் அஜித்துக்கு தாறுமாறாக  மீண்டும் ஒரு கம்பேக்கை கொடுக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம். ஆனால், ஒட்டுமொத்த படமும் அஜர்பைஜானில் ஷூட் செய்யப்பட்டால் தமிழ் ஆடியன்ஸை கனெக்ட் செய்யாமல் விவேகம் 2 போல வந்து விடாமல் இருந்தால் சரி என ஃபீல் செய்து வருகின்றனர்.

இதேவேளை, நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், எடுபடாமல் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement