• Jan 15 2025

வெளியே தள்ளிவிட்ட ஓட்டல்காரர்கள்.. நடுத்தெருவில் நிற்கும் சரவணன் - தங்கமயில்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா தனது கணவர் செந்திலிடம் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இதுவரை தனது வாழ்க்கையில் இவ்வளவு மகிழ்ச்சியாக தான் இருந்ததில்லை என்றும் நெகிழ்ச்சியாக கூறுகிறார். அப்போது செந்தில் ’இந்த வீட்டில் நீ திருமணம் செய்து கொண்டு வந்த பின்னர், எங்கள் வீட்டில் உள்ள அனைவரிடம் நல்ல பேரை எடுத்தாய், அதே பெயரை நான் உன் வீட்டில் நல்ல பெயர் எடுக்க வேண்டாமா என்று கூறுகிறார்.

இதனை அடுத்து ராஜி மற்றும் கதிர் இடையே நடைபெறும் உரையாடலில், ’உனக்கு ஏதேனும் செலவு இருக்கா? செலவு இருக்கிறது என்றால் என்னிடம் கேள், மீனா அண்ணி மாதிரி அப்பாவிடம் கேட்டு அவமானப்படக்கூடாது’ என்று சொல்ல ’எனக்கு எதுவும் செலவு இல்லை, அப்படியே இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்ல இருவருக்கும் இடையே சிறு உரையாடல் நடக்கிறது.

இந்நிலையில் சென்னைக்கு சென்ற சரவணன், தங்கமயில் புக் செய்து ஓட்டலுக்கு சென்று அறை புக் செய்து இருக்கிறோம் என்று கூற, அதற்கு ஓட்டல்காரர்கள், ‘நீங்கள் ஐயாயிரம் தான் அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறீர்கள், இன்னும் 21,000 ரூபாய் கொடுத்தால் மட்டும் தான் ஹோட்டல் அறை கிடைக்கும் என்று சொல்ல, சரவணன் அதிர்ச்சி அடைகிறார்.



இதனை அடுத்து அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுங்கள், நாங்கள் வேறு ஓட்டல் பார்த்துக் கொள்கிறோம் என்று சரவணன் கூறிய போது, அட்வான்ஸ் பணம் திருப்பி தர முடியாது என்று கூறிவிட்டனர். இதனை அடுத்து தங்கமயிலை கடிந்து கொள்ளும் சரவணன் ’இதை கூட சரியாக பார்க்க மாட்டாயா? இப்போது 20 ஆயிரம் ரூபாய் என்னிடம் இல்லை என்று கூற இருவரும் தெருவில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.

அப்போது பாண்டியன் போன் செய்யும் போது கூட சரவணன் உண்மையை சொல்லாமல் ரூம் நன்றாக இருக்கிறது, நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்’ என்று கூறுகிறார். இந்த நிலையில் பாக்கியம் போன் செய்ய அவர் சரவணன் இடம் ’என் பொண்ணு உலகம் தெரியாதவ, நீங்கள் நாலும் தெரிந்தவர், நீங்களாவது சரியாக கவனித்திருக்க வேண்டாமா? அவ்வளவு பெரிய ரூம் 5000 ரூபாய்க்கு எப்படி கொடுப்பார்கள் என்பதை யோசித்து இருக்க வேண்டாமா? என்று மொத்த பழியையும் தூக்கி சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போட, சரவணன் உச்சகட்ட கடுப்பில் இருப்பதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement