• Jan 18 2025

ஆர்யா மனைவியிடம் லவ் புரபோஸ் செய்த சூர்யா.. 5 வருடத்திற்கு முந்தைய வீடியோ வைரல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

ஆர்யா மனைவி சாயிஷாவிடம்  சூர்யா லவ் புரபோஸ் செய்த காட்சியின் வீடியோ 5 வருடம் கழித்து தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா, ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவான ’காப்பான்’ என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூர்யா மற்றும்  சாயிஷா ஜோடியாக நடித்திருந்த நிலையில், ஆர்யா முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார் என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் 5 வருடம் கழித்து இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகி உள்ளது.  இதில் சாயிஷாவிடம் ஆர்யா முதலில் லவ் புரபோஸ் செய்வது போன்றும், அதை பார்த்து சூர்யா கடுப்பாகும் காட்சிகளும், அதனை அடுத்து உங்கள் இருவரையும் சேர்த்து வைக்க தான் இப்படி நாடகம் என்று ஆர்யா சொல்லும் காட்சியும், அதன்பின் சாயிஷாவிடம் சூர்யா புரபோஸ் செய்யும் காட்சியும் உள்ளது. நல்லவேளை இந்த காட்சியை படத்திலிருந்து டெலிட் செய்து விட்டார்கள், இல்லாவிட்டால் இன்னும் கொடூரமாக இருந்திருக்கும் என்று இந்த டெலிட் காட்சியை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிக்கும் போதே ஆர்யா - சாயிஷா இடையே காதல் இருந்த நிலையில் இந்த படம் வெளியாகும் முன்னரே இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் அவ்வப்போது ஆர்யா - சாயிஷா தங்களது குழந்தையுடன் கூடிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருவார்கள் என்பதும் தெரிந்தது.


Advertisement

Advertisement