• May 20 2024

Biggboss செல்லும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் பிரபலம்... ஆனால் கதிர் இல்லையாம்.. அப்போ யார் தெரியுமா..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருவது 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சி 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 7ஆவது சீசன் அக்டோபர் 1-ஆம் தேதி ஆரம்பமாகவிருக்கின்றது.    


அந்தவகையில் பார்க்கும் போது இந்த ஷோ ஆரம்பமாக இன்னும் 3நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ளது. இதனையடுத்து போட்டியாளர்களின் பெயர்களும் நாளுக்கு நாள் இணையத்தில் கசிந்த வண்ணம் தான் இருக்கின்றன.

இந்நிலையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கதிர் என்றார் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்ற குமரன் கலந்து கொள்ளவிருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அது பொய் எனத் தற்போது ஒரு செய்தி வெளிவந்துள்ளது.


அதாவது குமரன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் தான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் எனக்கூறப்படுகின்றது. இது எந்தளவிற்கு உண்மை என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement