• Sep 21 2024

முல்லைக்குத் துணையாகப் போக கிளம்பிய மீனா மற்றும் தனம்... மூர்த்தி எடுத்த அதிரடி முடிவு... 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் . அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 


அதில் அனைவரும் ஒரு இடத்தில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது கதிர் "முல்லை கவர்மென்ட் வேலைக்கு போறதுக்காக திருச்சிக்கு எக்ஸ்சாம் எழுதப் போகணும்" என்கிறார். அதற்கு மூர்த்தி "நல்ல விஷயம் தானே முல்லையைக் கதிர் கூட்டிட்டு போய்ட்டு வரட்டும்" எனக் கூறுகின்றார். 


பதிலுக்கு மீனா "அவரு எப்படி குழந்தையை பார்த்துப்பாரு முல்லையோடு நான் போய்ட்டு வாரேன் என்று சொல்கின்றார். அதற்கு மூர்த்தி "அப்போ நீங்க மூன்று பேரும் போங்க" என்கிறார். இதனைக் கேட்ட முல்லை "எங்க ரெண்டு பேரோடையும் மீனா வந்த அவங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும்ல" என்று சொல்ல அப்போ ஜீவாவையும் கூட்டிட்டுபோங்க என்று சொல்கின்றார் மூர்த்தி.


அதற்கு தனம் "மீனா, முல்லை கூட நானும் போகட்டுமா" என மூர்த்தியிடம் கேட்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement