• May 19 2024

கரிகாலனின் பிறந்தநாளுக்கு... வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய நந்தினி... தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர். கதை மட்டுமன்றி கதாபாத்திரங்களின் நடிப்பும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.


அந்தவகையில் இந்த சீரியலில் கரிகாலனாக நடித்து வரும் விமல் பிறந்த நாளுக்கு, அதே சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்ரியா அவருடன் சேர்ந்து அண்ணன் தங்கையாக ரீல்ஸ் செய்த வீடியோ ஒன்றினை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருவதோடு ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கரிகாலனுக்கு தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement