• Jan 19 2025

ராஜிக்கு பாண்டியன் கூறிய ஆறுதல்..! சரவணன் - தங்கமயில் ரொமான்ஸில் கரடி போல் வந்த மீனா..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று கோமதி மற்றும் ராஜி கோயிலுக்கு செல்ல, அங்கு ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா கண்டபடி பேசுகின்றனர். குறிப்பாக ராஜி தனது மகளே இல்லை, அவள் செத்துப் போய்விட்டாள் என்று ராஜியின் அப்பா கூறியதை அடுத்து ராஜி கதறி அழுகிறார். நீங்கள் எல்லாம் ஒரு அண்ணனா? ஒரு வாழ வேண்டிய பொண்ண இப்படி சொல்கிறீர்களே என்று கோமதி ஆத்திரமடைய ராஜின் அப்பா மற்றும் சித்தப்பா இருவரும் தொடர்ந்து மனதை புண்படுத்தும் வகையில் பேசிவிட்டு கோவிலை விட்டு வெளியே செல்கின்றனர்.

 இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாண்டியன் உடனடியாக கோவிலுக்கு வந்து ’என்ன நடந்தது’ என்று கேட்க முதலில் கோமதி சொல்ல தயங்குகிறார். அதன் பிறகு கோமதி தனது அண்ணன் கூறியதை சொல்லி அழுகிறார். ’ஒரு வாழ வேண்டிய பெண்ணை செத்துப் போய்விட்டாள் என்று சொல்வதற்கு எப்படி அவர்களுக்கு மனம் வந்தது’ என்று கூறும் நிலையில் ’உங்க அண்ணன்களுக்கு தான் அறிவே இல்லையே, எதை எப்போது பேச வேண்டும் என்று தெரியாது என்று கூறிய பாண்டியன், ராஜியிடம் ‘நீ கவலைப்படாதே, உன் அப்பா இடத்தில், மாமா நான் இருக்கிறேன்’ என்று கூற ராஜி நெகிழ்ந்து போகிறார். இதனை அடுத்து இருவரையும் பாண்டியன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.



இந்த நிலையில் கிச்சனில் தங்கமயில் சமைத்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் சரவணன் ரொமான்ஸ் செய்ய அந்த நேரம் பார்த்து மீனா கரடி போல் குறுக்கே வர,  இருவருக்கும் தர்ம சங்கடமாகும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதையடுத்து ராஜி மற்றும் மீனா கோவிலில் நடந்ததை பேசிக் கொண்டிருக்கிறார்கள், அப்போது ராஜி ’மாமா நம் மீது கோபப்பட்டாலும், நம் மீது ரொம்ப பாசமாகத்தான் இருக்கிறார்’ என்று சொல்ல, மீனாவும் ’உண்மைதான் நான் கூட திருமணம் முடித்து வந்த போது சத்தம் போட்டாரே தவிர வீட்டுக்குள் சேர்க்க மாட்டேன் என்று சொல்லவில்லை, என் அப்பா என் வீட்டுக்குள் கூட நுழைய விடவில்லை, ஆனால் மாமா பண்பாக நடந்துள்ளார்’ என்று கூறும் போது அதை கேட்கும் கோமதி நெகிழ்ச்சியுடன் நிற்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement