• Jan 19 2025

மனோஜின் 4 லட்சத்துக்கு போடப்பட்ட நாமம்...ஸ்கெட்ச் போட்ட முத்து! ஆத்திரத்தில் விஜயா

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்துவும் மீனாவும் தாங்கள் கொண்டு வந்த செங்கற்களை வைத்து ரூம் கட்டுவதற்கு பிளான் போடுகின்றார்கள். மேலும் ரூமுக்கு ஸ்கெட்ச் போட்டு அதற்குள் போவது போலவும் கற்பனையில் நினைத்துப் பார்க்கின்றார்கள்.

இதைத் தொடர்ந்து மனோஜின் கடைக்கு வந்த கஸ்டமர், ஏற்கனவே கதைத்தது போல நாலு லட்சத்துக்கு சாமானை வாங்குகின்றார்கள். மேலும் அதற்கு பில் போட வேண்டாம் என்று சொல்ல, மனோஜ் எதற்கு என விசாரிக்கின்றார். அவர்கள் இது பிளாக் மணி. நீங்களும் உழைக்கனும் தானே எப்ப லாபம் பார்க்க போறீங்க என மனோஜின் மண்டையை கழுவ, அவரும் சரியென காசாக வாங்கிக்கொண்டு சாமானை கொடுக்க, அவர்கள் கொண்டு வந்த வண்டியில் சாமானை ஏற்றி செல்கிறார்கள்.

இதை அடுத்து வீட்டுக்கு வந்து ஸ்ருதி, தனக்கு கால் நோகுது, காலை பிடித்து விடுமாறு ரவிக்கு சொல்கிறார். ரவி கதவை மூடி விட்டு வருகிறேன் என சொல்லவும் அது எல்லாம் வேணாம். காலப்பிடி  என சொல்லி ரவி மீது காலை வைத்து படுக்கின்றார். ரவி கால்  பிடித்து விட்டது மட்டுமில்லாமல், ஸ்ருதியின் கால்களுக்கு நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருக்கும் போது இதை விஜயா பார்த்துவிட்டு உள்ளே வந்து இதெல்லாம் நீ செய்யக்கூடாதா என்று ஸ்ருதிக்கு பேசுகிறார். 


மேலும் இதெல்லாம் யாரும் பார்த்தால் என்ன ஆகும் என ரவிக்கும் ஸ்ருதிக்கும் பேச, இது எல்லாம் ஒரு தனித் ஃபீல். அது உங்களுக்கு புரியாது ஆண்டி என சொல்லி, இந்த நெயில் பாலிஷை அங்கிள் கிட்ட கொடுத்து உங்களுக்கு போட சொல்லுங்க. அப்ப புரியும் என சொல்லி அனுப்பி வைக்கிறார் மனோஜ்.

அதன் பின், கோவத்தில் வந்த விஜயா அண்ணாமலையிடம், இந்த வீட்டு மருமகள்கள் எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க என ஸ்ருதி பண்ண வேலையை பற்றி சொல்லி பேசுகிறார். அதற்கு அண்ணாமலை அந்த காலம் போல இல்ல இந்த காலம் என அவருக்கு விளக்கம் கொடுக்கின்றார். ஆனாலும் தன்னால் இதையெல்லாம் கேட்க முடியவில்லை பார்க்கவும் முடியவில்லை என்று சொல்ல, கொஞ்சம் பொறு வாரேன் என அண்ணாமலை கிளம்பி செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement