விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக சரவணன் - தங்கமயில் திருமணம் குறித்த காட்சிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்றைய எபிசோடில் தங்கமயில் நகையை எடை பார்க்க வேண்டும் என்று ஒருவர் கூறிய நிலையில் திடீரென தங்கமயில் மயக்கம் போட்டு விழுவதுடன் முடிவடைந்து இருந்தது. இந்த நிலையில் குமரவேல் மணப்பெண் தங்க மயிலை தூக்கி திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று திட்டமிடுகிறார்.
அதை எடுத்து அவர் தனது அடியாட்களை மண்டபத்திற்கு அனுப்பிய நிலையில் அந்த அடியாட்கள் தங்கமயிலை தூக்குவதற்கு பதிலாக மீனா மற்றும் ராஜியை தூக்கி விடுகின்றனர். இதனை அடுத்து மறுநாள் காலை மீனா, ராஜியை காணவில்லை என்று கோமதி கூற பாண்டியன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
திடீரென மீனா மற்றும் ராஜி காணாமல் போன நிலையில் சரவணன் - தங்கமயில் திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா? திருமணத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படுமா? கடத்தப்பட்ட ராஜி மற்றும் மீனா என்ன ஆனார்கள் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.
Listen News!