• May 13 2025

சூர்யாவிற்கு மட்டும் தான் தகுதி இருக்கு விஜய்க்கு இல்ல; திவ்யா சத்யராஜின் பரபரப்பான பேட்டி

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, சமுதாய சேவையிலும் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திய நடிகர் சூர்யா மற்றும் விஜய் குறித்து சமீபத்திய நேர்காணலில் திவ்யா சத்யராஜ் உரையாடிய விதம் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை சத்யராஜின் மகளாகவும், சமூக அவலங்களை எதிர்த்து பேசும் பேச்சாளராகவும் திகழும் திவ்யா, நேர்காணலில் கூறிய கருத்துக்கள் நேர்த்தியான விமர்சனமாகவும், சிலருக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.


திவ்யா தனது பேட்டியில் கூறியதாவது, “சூர்யா அண்ணா அகரம் பவுண்டேஷன் மூலமாக, ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகின்றார். நம்மைப் போல அனைத்துப் பசங்களும் படிக்கணும் என்ற எண்ணத்தோடு தன்னுடைய பணம் மட்டும் இல்ல, நேரமும், நம்பிக்கையும் செலவழிக்கிறார்.” எனத் சூர்யா பற்றி பெருமையாகக் கூறியிருந்தார்.

இதே பேட்டியின் தொடர்ச்சியில் தளபதி விஜய் குறித்து திவ்யா கூறியதாவது, “நான் விஜய் சாரை ஒரு பெரிய நடிகராக மதிக்கிறேன். அவருடைய பங்களிப்பு, ரசிகர்கள் அணி, மக்களிடம் அவர் பரவலாக இருப்பது எல்லாம் புரிகிறது. ஆனா… அவர் அரசியலுக்குள்ள வருகின்ற நோக்கம் என்னன்னு பார்த்தா… அது சுத்தமாக மக்கள் பிரச்சனைகளை சார்ந்தது போல தெரியல.” என்றார். இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. பலரும் திவ்யா சத்யராஜின் நேர்மையான பார்வையை பாராட்டுகிறார்கள். 


Advertisement

Advertisement