நடிகர் தனுஷின் அக்கா மகனான பவிஷ் மற்றும் நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தான் ‘அட்டாக்கர்’.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தொடங்கியுள்ளது. இளம் தலைமுறை நடிகர், நடிகைகள் இணையும் இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தப் படத்தை இயக்குநர் தாமோ நாகபூஷணம் இயக்குகிறார். இவர் முன்னதாக இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது உதவி இயக்குநரின் இயக்குநர் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ‘அட்டாக்கர்’ திரைப்படத்தின் முதல் காட்சிக்கு பா.ரஞ்சித் நேரில் கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
படப்பிடிப்பு தொடக்க விழாவில் படக்குழுவினரும், திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். பவிஷ் மற்றும் அவந்திகா ஆகிய இருவரும் இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், அவர்களின் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!