• Apr 28 2026

வயசு ஏற ஏற அழகு கூடுதே! - டிடியின் வீடியோவை பார்த்து வாயடைத்துப் போன நெட்டிசன்கள்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் மனதை பல ஆண்டுகளாக கவர்ந்து வரும் பிரபல தொகுப்பாளினிகளில் முன்னிலையில் இருப்பவர் திவ்ய தர்ஷினி, ரசிகர்களால் அன்புடன் “டிடி” என அழைக்கப்படுகிறார். தனது உற்சாகமான பேச்சு மற்றும் இயல்பான சிரிப்பு ஆகியவற்றால் அவர் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். குறிப்பாக விஜய் டிவியின் முக்கிய முகமாகவே டிடி பார்க்கப்படுகிறார்.


பல ஆண்டுகளாக பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள், விருது விழாக்கள், மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள டிடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரின் எளிமை மற்றும் அழகு ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து, தனது வாழ்க்கை தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், சமீபத்தில் டிடி சாறியில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் மிக எளிமையான பாரம்பரிய உடையிலும், அதே நேரத்தில் ஸ்டைலிஷாகவும் தோன்றுகிறார். அவரது அழகும், நம்பிக்கையுடன் கூடிய உடல் மொழியும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். “சாறியில் செமயா கலக்குறீங்க” போன்ற கருத்துக்களும் குவிந்து வருகின்றன. டிடி எந்த வடிவிலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க முடியும் என்பதற்கு இந்த வைரல் வீடியோ மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement