• Jun 07 2026

சுந்தர்.சி எடுத்த அதிரடி முடிவு! சினிமாவில் இருந்து விலகலா? வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்

shali / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் ரசிகர்களை மகிழ்வித்த அவர், தற்போது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “இதுவரைக்கும் சினிமாவில் ஒரு இயக்குநரா, தயாரிப்பாளரா, நடிகரா நிறைய படங்களில உங்களை சந்தோசப்படுத்தியிருக்கேன் என்று நம்புறேன். இப்ப என்னுடைய புதிய வாழ்க்கையை அறிவிக்கிறேன். முதன்முறையாக அரசியலில் அறிமுகமாகி இருக்கேன். மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நான் வேட்பாளராக இருக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

மேலும், சினிமாவில் தன்னை ஆதரித்த ரசிகர்கள், இந்த புதிய அரசியல் பயணத்திலும் தன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர் சியின் இந்த அரசியல் கள குதிப்பு, அவரின் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. சினிமாவில் வெற்றிகரமாக பயணம் செய்த அவர், அரசியலிலும் அதேபோல் சாதிப்பாரா என்பது குறித்து அனைவரும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement