• Apr 28 2024

ஜனனியை ட்விட்டரில் திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில், இப்படி ஒரு நபர் இந்த ஷோவில் இல்லாமலே இருந்து இருக்கலாம் என்று யாரை நினைக்கிறீர்கள் என கமல் கேட்டுள்ளார்.இதற்கு அமுதவாணன் விக்ரமனின் பெயரையும் காரணத்தையும் சொல்லுகிறார். அதேபோல ரச்சிதாவும், ஜனனியும் தனலட்சுமியின் பெயரை கூறுகின்றனர்.

மேலும் இந்த ப்ரமோவைவை பார்த்த ரசிகர்கள் ஜனனி அழகான ஆபத்து என இணையத்தில் கருத்துக்களை கூறிவருகின்றனர்.தனலட்சுமி ஜிபி முத்துவிடம் சண்டை போட்டதால் கடுப்பான ஜனனி, பெரியவங்க வா.. போனு சொல்லுவது இயல்புதான். மேலும் இது பிக் பாஸ் வீடு,இது ஒன்னும் ரீல்ஸ் இல்லை என ஜனனி பேசியதால் இருவரும் எதிரும் புதுருமாயினர். 



எனினும்  இதைப்பார்த்த ஒரு நெட்டிசன்ஸ், ஜனனி அழகான ஆபத்து. அமைதியா இருந்து மனதில் வஞ்சம் வைக்கும் குணம் என ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மற்றொரு இணையவாசி, தனலட்சுமி உண்மையா இருக்குது. அத்தோடு ஜிபி முத்துவை யாரும் மதிப்பதில்லை. ஆனா இந்தப் பொண்ணு வெளிப்படையா காட்டுவது தப்பாத்தெரியலாம். இன்னும் கொஞ்ச நாள் போகும் போது தனலட்சுமி, ஆயிஷா தான் மனதில் உள்ளதை வெளிப்படையா பேசுறாங்கண்ணு சொல்லப் போறோம் என பதிவிட்டுள்ளார்.

ஜனனி பிக் பாஸ் வீட்டுக்கு வந்ததும், ஜனனிக்கு ஆர்மி தொடங்கி டிராண்டாக்கிய ரசிகர்கள் பலர் இப்போது அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.அத்தோடு  பிக் பாஸ் ரசிகர் ஒருவர், தனலக்ஷ்மி பொண்ணுக்கு எந்த பயமும் இல்ல, ஜி.பி.முத்துவை கதற விட்ருச்சு. ஆனால், ஜனனி போலி இது போக போக புரியும் என பதிவிட்டுள்ளார்.

விக்ரமனன் மீது அமுதவாணனின் கருத்து மிகவும் வேடிக்கையாக இருக்கு. ரச்சித்தா ஏமாற்றமடைந்தார். ஜனனி எதுக்கு பேசி நேரத்தை வீணாக்குகிறார்.மேலும்  இந்த வாரம் செம்மேயா போகுது..நம்பிக்கை விக்ரமன்,ஷிவின் அவர்களின் ஆட்டம் இல்லேனா ரொம்ப கஷ்டம் என ஒரு இணையவாசி பதிவிட்டுள்ளார்.

முதல் இரண்டு நாட்களை பார்க்கும் போது விக்ரமன் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் அவர் வரும் வாரங்களில் சண்டைகள் மற்றும் வேலைகளை எவ்வாறு சமாளிப்பார் என்பதைப் பார்க்க காத்திருக்கிறேன், ஆனால் அவர் தனது அரசியல் மற்றும் வாழ்க்கையைப் பற்றி பயப்படுவது போல தெரிகிறது. மேலும் இவர் இப்படி இருந்தார் இந்த நிகழ்ச்சியில் அவரால் வெற்றிபெற முடியாது.








Advertisement

Advertisement

Advertisement