லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு கமலஹாசனின் மார்க்கெட்டும் எகிறியது.
இதை தொடர்ந்து கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தடபுடலாக இந்த படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றது.
எனினும் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. ஆரம்பத்தில் இந்த படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்றெல்லாம் கணக்கு போட்டு பார்த்தார்கள். ஆனால் அந்த கணக்கை தவிடுபொடியாக்கும் விதமாகத்தான் இந்தியன் 2 படத்தின் ரிசல்ட் அமைந்தது.
இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் ஓடிடி உரிமையை 120 கோடிக்கு பேசி தப்பித்து விடலாம் என தயாரிப்பு நிறுவனம் போட்ட கணக்கில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் ரிசல்ட் மோசமானதால் அதன் ஓடிடி ரிலீஸ் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது இந்தியன் 2 படத்திற்கு 120 கோடி தர முடியாது என தற்போது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கிடுக்குபிடி பிடித்துள்ளது. அதாவது இந்த படத்தை பாதி தொகைக்கு மட்டுமே தர முடியும் என டீல் பேசி வருவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை இந்த டீல் உறுதியானால் இந்தியன் 2 படம் 50 கோடி வரை இழப்பை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!