• Oct 22 2024

பிளடி பெக்கர் படத்திற்கு கவின் வேண்டாமென்ற நெல்சன்.! அவர்ட சாய்ஸே வேறு..

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

நடிகர் கவின் நடிப்பில் இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் தான் பிளடி பெக்கர். இதற்கு முதல் லிப்ட், டாடா, ஸ்டார் ஆகிய படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். அவர் நடிப்பில் வெளியாகியுள்ள பிளடி பெக்கர்  படமும் அவரது கேரியரில் பெஸ்ட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் கவின் யாசகர் வேடமிட்டு நடித்துள்ளதோடு அவருடைய பாடி லாங்குவேஜ் மிகச் சிறப்பாக காணப்படுகின்றது. இதற்கான பாராட்டுக்களை அவர் இப்போதே பெற்றுள்ளார். இதன் இடையே நேற்றைய தினம் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்ச்சியில் நெல்சன் திலிப் குமார், சிவபாலன் முத்துக்குமார், கவின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பல சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்துள்ளார்கள்.


இந்த நிலையில்,  பிளடி பெக்கர் படத்தில் கவின் வேண்டாம் என்று நெல்சன் திலிப் குமார் கூறியுள்ளார். ஆனாலும் இந்த படத்தின் இயக்குனர் சிவபாலன் உறுதியாக இருந்த நிலையிலேயே இந்த படத்திற்கு கவின் ஹீரோவாக அறிமுகம் ஆகி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது,  பிளடி பெக்கர் படத்தில் கவின் ஹீரோவா வேண்டாம் என திலீப் குமார் கூறியுள்ளதோடு, அவருக்கு பதிலாக தனுஷ் அல்லது விஜய் சேதுபதியை ஹீரோவா எடுக்கலாம் என்று கூறியுள்ளார். முதலில் அதற்கு தலையாட்டிய இயக்குனர் சிவபாலன் இரண்டு தினங்கள் கழித்து கவின் தான் தனக்கு ஹீரோவாக வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் தான் தற்போது அவர் ஹீரோவாக களமிறங்கி உள்ளார் என நெல்சன் ஓப்பனாக பேசியுள்ளார்.

Advertisement