• May 19 2024

ஒன்று சேர்ந்த இரண்டு லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகள்.. க்யூட் புகைப்படங்கள்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் மிகப்பெரிய நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் அதனால் தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரசிகர்களால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நயன்தாராவுக்கு முன்பே மலையாள திரையுலகில் அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்த மஞ்சு வாரியர். அதன் பின் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கடந்த 10 ஆண்டுகளாக மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் திரையுலகில் இருந்தாலும் இருவரும் இணைந்து இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பதும், அது மட்டும் இன்றி எந்த ஒரு திரைப்பட விழாவிலும் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது சமீபத்தில் நயன்தாரா மற்றும் மஞ்சு வாரியர் இணைந்த புகைப்படத்தை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் அவர்நாம் அனைவரும் நமக்குள் ஒரு அற்புதமான பெண்ணை வைத்திருக்கிறோம், இதோ என் பக்கத்தில் இருக்கும் இந்த பெண்ணை தான் கூறுகிறேன், லவ் மை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றும் குறிப்பிட்டுள்ளார்

இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வரும் நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர். ரசிகர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement