• Dec 03 2024

'தம்பி விஜய்க்காக என் இதயத்தையே அறுத்துக் கொடுப்பன்' ஒரு நிமிடத்தில் சைக்கோ வில்லன்களை நினைவுப்படுத்திய மிஷ்கின்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வெற்றி விழா, நேரு ஸ்டேடியத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குறித்த விழாவில் பேசிய மிஷ்கின் தம்பி விஜய்க்காக என் நெஞ்சையே அறுத்துக் கொடுப்பேன் என சொன்னது பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லியோ சக்ஸஸ் வெற்றி விழாவிற்கான முன்னேற்பாடுகள், கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் நிலையில், அதிகப்படியான கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கவும், அசம்பாவிதங்கள் நேராமல் இருக்கவும் பொலிசாரால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


குறித்த லியோ வெற்றி விழாவில் முதல் ஆளாக மேடைக்கு வந்து பேசிய இயக்குனர் மிஷ்கின், 'ஒரு மாசத்துக்கு முன் ஏர்போர்ட்டில் யூரின் போகும் போது கூட என்னை விடாமல் ஒருவர் லியோ அப்டேட் கேட்டார். இதை தொடர்ந்து வெளிநாட்டுக்கு சென்றாலும் அங்கும் 'லியோ' படத்தின் அப்டேட் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு விஜய் ரசிகர்கள் மனதில் குடியேறியுள்ளார்.  நான் என் கண்ணால் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய் தான்.  விஜய் போன்ற ஒரு மனிதனை கடும் உழைப்பாளியை நான் பார்த்ததே இல்லை. நான் என்றுமே நேரத்தை கடைபிடித்தது கிடையாது. ஆனால், காலை 8 மணிக்கு மேக்கப்புடன் தயாராக இருக்கும் ஒரே நடிகர் விஜய் தான். 

நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனதும் அண்ணா என்று என் கையை பிடித்துக்கொண்டு அணைத்த தருணத்தை மறக்க மாட்டேன். இந்த மேடையில் நிற்பதை கவுரமாக பெருமையாக கருதுகிறேன் விஜய் நிஜத்திலும் ஒரு ஹீரோ தான்' என கூறினார்.


அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, 'விஜய் சார் மேல எவ்ளோ பாசம் இருக்குன்னு ஒரே வார்த்தைல சொல்லுங்க' எனக் கேக்க, அதற்கு ஒரே வார்த்தையில் 'தம்பி விஜய்க்காக என் நெஞ்சையே அறுத்துக் கொடுப்பேன்' என அதிரடியாகக் கூறி ஒட்டுமொத்த அரங்கத்தையே அதிர வைத்தார். 


 

Advertisement

Advertisement