• Jan 18 2025

காட்டில காக்கா,கழுகு எல்லாமே இருக்கும் -லியோ பட வெற்றி விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

லியோ' படத்தின் வெற்றிவிழா தற்போது மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. தளபதி விஜயின் வருகையை தொடர்ந்து, நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் துவங்கிய நிலையில், இப்படத்தில் நடித்த பிரபலங்கள், மற்றும் படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து பேசியிருந்தனர்.

இந்த நிலையில் விஜய் தனது பேச்சை ஆரம்பித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கத்திக் கூச்சலிட ஆரம்பித்தனர். அந்த வகையில் அவர் கூறியதாவது,எங்களுக்கு நிறைய வேலை இருக்கு அதைப் பார்ப்போம். எதுக்கு தேவையில்லாமல் கோவப்படனும். அது உடம்புக்கு நல்லதில்லை. இப்போ நான் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லுறேன்.


காட்டில மான், யானை காக்கா, கழுகு என்று எல்லாமே இருக்கும் என்று சொல்ல ரசிகர்கள் கத்த, காடு என்றால் எல்லாம் இருக்கு தானே என்று சொல்லி விடடு தனது கதையை சொல்ல ஆரம்பித்தார். அதாவது இப்பிடி எல்லா விலங்குகளுமே இருக்கிற காட்டில இரண்டு பேர் வேட்டைக்கு போறங்க ஒருத்தர் வில் அம்புவுடன் போறாரு, மற்றவர் ஈடடியுடன் போறாரு.

வில் அம்புவுடன் போனவரு முயலைப் பிடிச்சிட்டு வந்திட்டாரு, ஆனால் ஈட்டியோட போனவர் யானைக்கு குறி வைத்ததால் எதுவுமே இல்லாமல் வந்தாரு. இவங்க ரெண்டு பேர்ல யாரு ஜெயிச்சாங்க தெரியுமா? ஈட்டியோடு போனவரு தான். ஏன் என்றால் நம்மலாள ஈசியா ஜெயிக்க முடியிறதை ஜெயிக்கிறது இல்லை வெற்றி. ஜெயிக்க முடியாததை முயற்சி பண்றோம்ல அது தான் வெற்றி.  எப்பவும் நம்முடைய குறிக்கோளை பெருஷாக வைச்சிருக்கனும். அப்பதான் பெரிய விஷயங்களை சாதிக்க முடியும்.


சினிமாவை சினிமாவாகப் பாருங்க இப்போ இருக்கிற எல்லா மாணவர்களுமே புத்திசாலிங்க, காலேஜ், ஸ்கூல் போகும் போதெல்லாம் வைன் ஷாப் இருக்கு அப்போ எல்லாம் போகாதவங்க, படத்தை பார்த்திட்டு தான் போவாங்களா, அவங்களுக்கு என்ன பண்ணனும் என்று தெரியும். உலகத்தில் நிறைய நல்ல விஷயம் இருக்கு அதை பண்ணுறதுக்கான வழிகளைப் பாருங்க பெரிய பெரிய லட்சியங்களை உருவாக்குங்க. நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு என்று ஓபனாகப் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement