தமிழ் திரையுலகில் "பிக் பாஸ்" மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது திரைபயணம் குறித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது சினிமா பயணத்தில் சந்தித்த சவால்கள் மற்றும் எதிர்கால நோக்கங்கள் என்பன பற்றி உணர்ச்சி பூர்வமாக கூறினார்.
லாஸ்லியா நேர்காணலில் பேசும்போது, "பிக் பாஸ் கிடைத்தது எனக்கு எதிர்பாராததொன்று என்றதுடன் நான் இங்கு வருவேன் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை. ஆனால் அதுவே எனது வாழ்க்கையை மாற்றியமைத்தது" எனக் கூறினார்.
மேலும், "பிக் பாஸ் எனக்கு அளித்த அந்த வாய்ப்பு மற்றும் அதன் மூலம் கிடைத்த ரசிகர்களின் பேராதரவு என்பன எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்தது" என தெரிவித்தார்."எனக்கு ஒரு கதையை பார்த்து ok கூட சொல்லத் தெரியாது என்றதுடன் எனக்கு சினிமா பற்றி வழிகாட்டுவதற்கும் யாரும் இல்லை" என்று கூறியுள்ளார். எனினும், இந்த தடைகளை மீறியும், தனது திரைப்பயணத்தை வெற்றிகரமாக கட்டியெழுப்ப பல முயற்சிகளை செய்தேன் எனத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் பிக்பாஸ் தனது வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது என்றாலும் தான் உண்மையான வெற்றியை சினிமா மூலம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.மேலும் சென்னைக்கு வந்து சினிமாவில் நடிப்பது என்பது தன்னுடைய மிகப் பெரிய கனவு என உணர்ச்சி பூர்வமாக கதைத்துள்ளார்.
Listen News!