• Feb 19 2025

தமிழில் ஹிட் கொடுத்து... ஹிந்தி ரீமேக்கில் படுதோல்வியைச் சந்தித்த "லவ் டுடே"!

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை கண்ட "லவ் டுடே", படம் 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஹிந்தியில் "லவ்யபா" என்ற பெயரில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. 

அதில் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் மற்றும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 60 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.


பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வந்த "லவ்யபா" திரைப்படம் ஹிந்தி ரசிகர்களிடம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. இதனால் 60 கோடி ரூபாய் செலவாகி உருவான படம், முதல் 10 நாட்களில் 6.8 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இத்தகைய மோசமான வரவேற்பிற்கு தமிழில் இருந்த நகைச்சுவை உணர்ச்சி மற்றும் சமூக விமர்சனம் கலந்த பாவனை ஹிந்தியில் இல்லாது இருந்தமையே காரணமாகும்.

தமிழில் உருவான "லவ் டுடே" படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் யுவானா போன்ற நடிகர்கள் நடித்ததுடன் அவர்கள் தமது  இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினர். இதனால் அதிகளவு ரசிகர்கள் அந்தப் படத்தினை விரும்பி பார்த்தனர். ஆனால் "லவ்யபா" படத்தில், ஜுனைத் கான் மற்றும் குஷி கபூர் ஆகியோரால்  ரசிகர்களை அந்த அளவிற்கு கவரமுடியவில்லை. அத்துடன் இவர்கள் இருவரும் திரையுலகிற்கு புது முகங்களாக இருந்தமையும் படம் தோல்வி அடைந்து கொள்ள காரணமாகியது.

Advertisement

Advertisement