• Jul 27 2024

அடுத்தடுத்து 2 படங்களை ரிலீஸ் செய்யும் இசை அசுரன்..! என்னென்ன படங்கள்?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மட்டுமல்லாது நடிகராகவும் சிறந்து விளங்குபவர் தான் ஜி.வி பிரகாஷ். இவர் இசையமைப்பில் பல படங்கள் சிறப்பான பாடல்களுடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இவரை இசை அசுரன் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .

குறிப்பாக கிராமத்து பின் புலங்களில் வெளியாகும் படங்கள், இவரது இசையால் உயிர் பெற்று வருகின்றன. இவ்வாறு அதிகமான வெற்றி படங்களை இவர் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இரண்டு படங்களின் அப்டேட் வெளியாகியுள்ளன.


ஜிவி சங்கர் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசை அமைத்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் கள்வன். இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் யானைத்தந்தம் குறித்து பேசும் படமாக காணப்படுகிறது. இந்த படம் எதிர்வரும் மாதம் 4ம் திகதி வெளியாகவுள்ளது. 

அத்துடன், ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ரெபெல் திரைப்படம் மார்ச் மாதம் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இவ்வாறு, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் மற்றும் ரெபெல் ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement