• Jan 19 2025

தமிழ்நாடு இயக்குநர் சங்கத்தை பதம்பார்த்த தேர்தல்.. யார் யாருக்கு என்ன பதவி தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில், கடந்த கால பதவிக்காலம் முடிந்த நிலையில் இந்த வருடத்திற்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கு என்று தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் செயலாற்றி வருகிறது. இதில் சுமார் 2600 பேர் உறுப்பினர்களாக காணப்படுகிறார்கள். 2600 பேர் வரை உறுப்பினர்களாக இருந்த போதிலும் வாக்கெடுப்பு  உள்ளோர்களின் எண்ணிக்கை 2000 ஆக மட்டுமே காணப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்பு நடந்த இயக்குனர்கள் சங்க தேர்தலில் விக்ரமன் அணி - பாக்யராஜ் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. அதில், விக்ரமன் அணியை சேர்ந்த ஆர்.கே செல்வமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து 2024 தொடக்கம் 2026 ஆம் ஆண்டுக்கான இயக்குனர் சங்க தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. 


அதன்படி மாதம் 16ஆம் தேதி அந்த தேர்தல் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என ஆர்.கே செல்வமணி அறிவித்திருந்தார்.

இயக்குனர் சங்கத்திற்கு ஒரு தலைவர், இரண்டு துணை தலைவர்கள், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் மொத்தமாக 27 பதவிகள் காணப்படுகின்றன.  

இவ்வாறான நிலையில் தலைவர் பதவிக்கு இயக்குனர் ஆர்.வி உதயகுமார் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல செயலாளர் பதவிக்கு இயக்குனர் பேரரசு, பொருளாளர் பதவிக்கு இயக்குனர் சரண் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.


மேலும் துணைத் தலைவர் பதவிக்கு அரவிந்த்ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இணை செயலாளர் பதவிக்கு இயக்குனர்கள் சுந்தர்.சி, எழில், ஏ. வெங்கடேஷ் ஆகியோரும் மனுதாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு இயக்குனர் சங்கத் தலைவராக இயக்குனர் ஆர்.வி உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சின்ன கவுண்டர், எஜமான், பொன்னுமணி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர்.


அதேபோல் கடந்த முறை பொருளாளராக இருந்த பேரரசு இந்த முறை செயலாளராக பதவி ஏற்க இருக்கிறார்.

இவர்களை தொடர்ந்து பொருளாளராக இயக்குனர் சரண், துணைத் தலைவர்களாக அரவிந்த்ராஜ், கே.எஸ் ரவிக்குமாரும், இணை செயலாளர்களாக சுந்தர்.சி, எழில், ஏ. வெங்கடேஷ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 

Advertisement

Advertisement