நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்து தீபாவளி முன்னிட்டு வெளியாக இருக்கும் திரைப்படம் அமரன். இது மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவருடைய வாழ்க்கை வரலாற்றினை எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் திரைப்பட ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் அமரன் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீ மற்றும் உமைர் கலந்து கொண்டிருந்தனர்.
கலகலப்பாக நடந்த பேட்டியில் அமரன் திரைப்படம் தொடர்பாக பல விடையங்களை கூறியுள்ளனர். நடிகர் உமைர் கூறுகையில் அமரன் திரைப்படத்திற்கு கேஷ்மீர் காரர் வேணும்ன்னு சொன்னாங்க நான் ஒரு கேஷ்மீர் காரர் எனக்கு தமிழ் தெரியாது அமரன் திரைப்படத்திற்க்காக சென்னை வந்து தமிழ் கத்துக்கிட்டேன். அமரன் திரைப்படம் என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு தொடக்கம். நான் ஒரு யூடுப்பர் ஒரு தடவை ரோட்டுல ஹீரோமாதிரி நிக்கிறன் அசிஸ்டன் டெரெக்டர் வந்து உங்களைத்தான் தேடுறன் நீக்க கேஷ்மீர் தானே ஒரு படம் பண்ணனும் முக்கியமான ரோல்னு சொன்னாரு ஒடனே ஓகே சொல்லிட்டேன்.
மகாபலி புறத்தில் ஒரு பாட்டு பாடி காட்டினேன் சிவா சார் உடனே இது முக்கியமான படம் பாட்டு எல்லாம் படாதிங்கனு கலாச்சிட்டாரு. சிவகார்த்திகேயன் அண்ணா நான் என்ன செஞ்சாலும் கோவிக்கமாட்டாரு, சரியான ப(f)ண் அவரு. டான்,ரெமோ போன்ற படங்கள் பார்த்து இருக்கேன். படம் சூப்பர் sk அண்ணா அதைவிட சூப்பர் என்று கூறினார்.
நடிகர் ஸ்ரீ அமரன் குறித்து இவ்வாறு கூறியிருந்தார் எனக்கு ஆர்மி போகவேண்டும் என்பது எனது கனவு ஆனால் நான் 10வது கூட ஒழுங்கா படிக்கல இனி எங்க ஆர்மி போறது வேலைய பார்ப்போம்னு நடிக்க வந்தான் கஷ்ட்டப்பட்டு தன ஒரு ஒரு நல்ல படங்களிலும் வாய்ப்பு கிடைக்கும் அமரன் எனக்கு கிடைச்சது ரொம்ப பெரிய விஷயம். அதுல இருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் உண்மையாக இருந்தவங்க இயக்குனர் சொல்வதை தாண்டி நாங்க வேற நடிக்க முடியாது. ஷூட்டிங் இல்லனா நான் உமைர், sk எல்லாரும் ஒண்ணா ஊர் சுத்துவோம்.
1ஸ்ட ஷாட்டே போருக்கு போறமாதிரியான சீன் தான். சிவா பேசுனாரு உண்மையிலே முகுந்த் அவரு மேல இறங்கி பேசுனமாதிரி இருந்துச்சி, உடம்பெல்லாம் புல்லரிச்சிருச்சி. படம் வேற லெவலா இருக்கு முகுந்த் அப்பிடிக்கிறவருடைய கதை இதுவரைக்காலம் ஏன் பலருக்கு தெரியாம போச்சி அப்டினு கவலை பட்டேன். இயக்குனர் நாள் இனி இது உலகம் முழுவது தெரியப்போகிறது என்று கூறியுள்ளார்.
Listen News!