• Jul 15 2025

படம் பிடிச்சிருக்கா..? ரசிகர்களிடம் நேரடியாகக் கேட்ட முகின் ராவ்..! வைரலாகும் வீடியோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

"பிக்பாஸ்" மூலம் பிரபலமான முகின் ராவ்நடித்த புதிய திரைப்படமான "ஜின்" நேற்று தியட்டரில் வெளியாகியிருந்தது. இப்படத்தை தியட்டருக்குச் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து முகின் பார்த்த நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


சிறப்பான கதாப்பாத்திரங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த முகின், ரசிகர்களிடம் நேரடியாக படம் பற்றிய கருத்துக்களை கேட்டது ஒரு புதிய முயற்சியாக அமைந்திருந்தது. 2025ம் ஆண்டின் சிறந்த சினிமாக்களில் ஒன்றாக கருதப்படும் "ஜின்" திரைப்படம், நேற்று திரையிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு பிரபல தியட்டரில் ரசிகர்களை நேரில் சந்தித்த முகின், “படம் பிடிச்சிருக்குதா.?” என நேரடியாகக் கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் “நல்லா இருந்தது சார்”, “மீண்டும் ஒரு ஹிட்!” எனத் தெரிவித்திருந்தனர். இதைக் கேட்ட முகின் “Thank you so much!” என மனமுவந்த புன்னகையுடன் பதிலளித்த காட்சி, ரசிகர்களிடையே பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.


முகின் ரசிகர்கள், அவரை நேரில் பார்த்ததும் செல்ஃபி, வீடியோ, ஆட்டோகிராஃப் என உற்சாகமாக வரவேற்றனர். சமூக வலைத்தளங்களில் தற்போது #JINNMovie #MugenRao என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது.

Advertisement

Advertisement