• Dec 06 2024

வெளியானது முஃபாசா - தி லயன் கிங்' ட்ரெய்லர்! உரத்து ஒலிக்கும் தமிழ் பிரபலங்களின் குரல்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

"லயன் கிங்" திரைப்படம் தமிழ் மக்களுக்கு அவ்வளவு ஃபேவரைட். சிம்பா, டிமன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களையும் கார்டூன் வடிவிலிருந்து பலரும் ரசித்து வருகிறார்கள். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வடிவில் 2019-ம் ஆண்டு `தி லயன் கிங்' அனிமேஷன் திரைப்படம் வெளியாகியிருந்தது. 


தமிழ் மக்களுக்கு அதிகளவில் பரிச்சயமான நடிகர்களின் நகைச்சுவை தொனி கொண்ட குரல்தான் தமிழகத்தில் இப்படத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றது. இந்தக் குரல்கள் அதன் இரண்டாம் பாகத்திற்குக் கொஞ்சம் `மவுசு' கிடைக்கச் செய்திருக்கிறது. 


`தி லயன் கிங்' படத்தின் அடுத்த பாகமான `முஃபாசா - தி லயன் கிங்' திரைப்படம் அடுத்த மாதம் 20 திகதி வெளியாகவிருப்பதையொட்டி தமிழ் டிரெயிலரை வெளியிட்டிருக்கிறது டிஸ்னி. இந்நிலையில் இந்த கதாபாத்திரங்களுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நச்சத்திரங்கள் வாய்ஸ் கொடுத்துள்ளனர். அவர்களுடைய பெயர்களுடன் புகைப்படங்களை குழு  வெளியிட்டுள்ளது. 


Advertisement

Advertisement