• Apr 28 2024

ரெட் அன்ட் ப்ளூ நிற ஆடையில் நாகினி சீரியல் நாயகி நடத்திய கலக்கல் போட்டோஷூட்- வைரலாகும் புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'நாகினி' என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இந்த சீரியலில் இவரது நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது. அதுமட்டுமல்லாது இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கின்றது. இவருக்கு ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு.

இதன் பின் பாலிவுட் திரையுலகில் பிரபலமான பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் நடிகை மௌனி ராய் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு இன்னும் எந்தப் படங்களிலும் கிடைக்கவில்லை.

சீரியல் நடிகையான இவர் சமீபத்தில் தனது நீண்ட நாள் பாய்பிரண்டான சூரஜ் நம்பியார் என்பவரை கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார். எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் மௌனி ராய் திருமணத்திற்குப் பின்னரும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும், மற்றும் தனியாக இருக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்வார்.

இந்நிலையில் நடிகை மௌனி ராய் ப்ளூ அன்ட் ரெட் நிற ஆடையில் பதிவிட்ட லேட்டஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. இப்புகைப்படங்களைப் பார்த்த மௌனி ராயின் ரசிகர்கள் தமது லைக்ஸை அள்ளிக் குவிப்பது மட்டுமல்லாமல் அப்புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement