• Apr 19 2024

தனது படங்கள் தொடர்ந்து பிஃளாப் ஆனதால் அரசியலில் ஈடுபடவுள்ள நடிகர் விஷால்- அப்போ இனி நடிக்க மாட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து இயக்குநராக மாறியவர்கள் பலர் உண்டு. அதேபோன்று உதவி இயக்குநராக இருந்து பின் கதாநாயகனாக மாறியவரே நடிகர் விஷால். அது மட்டுமல்லாது இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர் உதவி இயக்குநராகப் பணியாற்றும் பொழுது 'செல்லமே' என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி, திமிரு, சத்யம், தாமிரபரணி, நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கின்றார். இவ்வாறு பல படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நடிகர் சங்கத்தில் தயாரிப்பாளர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்த விஷால் இடையில் சரியான படங்களைக் கொடுக்கவில்லை. இப்போதும் பல படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் இவரின் படங்கள் நஷ்டம் என்றில்லாமல் சாதாரண வசூலை பெற்று வருகின்றன.

இந்நிலையில் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகின்ற இவர் தற்போது சினிமாவையும் தாண்டி அரசியலில் குதிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது நடிகர் விஷால் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட கட்சி சார்பாக போட்டியிட இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும் இது தொடர்பான அதிகாரபூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆகவே இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement