• Apr 24 2024

ரஜினிக்கு சிறந்த காமெடி சென்ஸ் அதிகமாவே இருக்கு- திடீரென புகழ்ந்து பேசிய பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் பிரித்விராஜ். இவர் வேற்று மொழியாளர்களில் ஒருவராக இருந்தாலும் தமிழ் மக்களிற்கு நன்கு பரீட்சயமாகும் அளவிற்கு சிறந்த தமிழ்ப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருக்கின்றார். அந்தவகையில் தமிழ் சினிமாவிலும் இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.

நடிகர் பிரித்விராஜ் 'காவியத் தலைவன்' என்ற படத்திற்கு பின்னர் தமிழ் மொழிப் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. இதற்கான காரணம் பிரித்விராஜ் திரைப்பட இயக்குநர் ஆனது தான் என ஒரு சிலர் கூறியிருந்தனர். அதாவது இவர் ஏற்கெனவே நடிகர் மோகன் லாலை வைத்து 'லூசிஃபர், ப்ரோ டாடி' என்கிற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். அத்தோடு 'லூசிஃபர் 2 மற்றும் டைசன்' என்கிற இரண்டு படங்களை இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது இவர் தற்போது இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் 'கடுவா' என்ற படத்தில் நடித்துள்ளார். இவரோடு இணைந்து லீஷ் போத்தன், சித்திக், சம்யுக்தா மேனன், அஜூ வர்க்கீஸ், சாய்குமார், சீமா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் தற்போது ரிலீஸிற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிக் கூறிய செய்தி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது "கமல் சாரின் காமெடி சென்ஸ் பற்றி பலருக்குத் தெரியும், பஞ்சதந்திரம் போன்ற படங்களில் வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் ரஜினி சாரைப் பற்றி யாரும் அவ்வாறு பேசியதில்லை. ரஜினி சாருக்கு சிறந்த காமெடி சென்ஸ் உள்ளது" என்று தெரிவித்திருக்கின்றார்.

நம்ம சூப்பர் ஸ்டாரின் நடிப்புத் திறமையை பலரும் புகழ்ந்து நாம் கேட்டிருப்போம். ஆனால் அவரின் காமெடி சென்ஸ் பற்றி இதுவரை யாரும் குறிப்பிட்டு சொன்னதில்லை. எனவே நடிகர் பிரித்விராஜ் இவ்வாறு கூறியதைக் கேட்ட ரசிகர்கள் இத்தகவலை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement