• Apr 27 2024

என்னோட மகனுக்கு பள்ளிக்கூடத்தில் சீட்டு வாங்கிக் கொடுத்தது மீனா தான்-மனம் உருகிப் பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா

stella / 1 year ago

Advertisement

Listen News!

“தஞ்சாவூரு மண்ணை எடுத்து தாமிர பரணி தண்ணி எடுத்து சேர்த்து சேர்த்து செய்த இந்த பொம்மை என்ற பாடலுக்கு சொந்தக்கார் தான் மீனா. இப்பாடலின் மூலம் தனது இயல்பான அழகினாலும் காந்தத் கண் பார்வையினாலும் ரசிகர்கள் பலரைக் கவர்ந்த முன்னணி நடிகையாகவும் இருந்தவர்.

இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்ததோடு தற்பொழுது ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.

மேலும் இவரது கணவரான வித்யாசாகர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தார். இதனை அடுத்து பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தமது அஞ்சலியைச் செலுத்தி இருந்தனர்.அவரது உடல் சற்று முன் பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஆம்புலன்சில் அவரது திருவுருவ புகைப்படம் மாட்டி உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது வழி நெடுகிலும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முன்னணி நடிகர்கள் பலரும் மீனாவின் கணவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவாக இருந்த போதே அவரை எப்படியாவது குணப்படுத்தி விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு மிகவும் கஷ்டமான மன நிலையில், இருந்து வந்த நடிகை மீனா எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் தன்னையும் தனது மகள் நைனிகாவையும் இவ்வளவு சீக்கிரமாக விட்டுச் சென்று விட்டாரே என ரொம்பவே கலங்கி போய் விட்டார்.

இந்த நிலையில் பிரபல நடிகரான ரமேஷ் கண்ணா தன்னுடைய மகனுக்கு பள்ளிக்கூடத்தில் சீட்டு வாங்கிக் கொடுத்தது கூட மீனாதான் என்று மீனாவின் கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் மிக உருக்கமாக பேசியுள்ளார்

மேலும் சினிமாவில் ஹீரோயின் ஆவதற்கு முன்பாகவே மீனாவை நன்கு தெரியும், என் குழந்தைகளோடு தான் விளையாடிக் கொண்டிருப்பார். அவருக்கு இப்படியொரு நிலைமை இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கக் கூடாது. அவர் சீக்கிரம் இந்த துயரத்தில் இருந்து மீள இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என மனவேதனையுடன் பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement