• Nov 22 2024

TVK கட்சியின் உறுப்பினர் சேர்க்கை உடனடியாக நிறுத்தம் ? விஜய்யின் உத்தரவு என்ன?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனது கட்சி பெயரை அறிவித்து அரசியலில் நுழைந்தார் நடிகர் விஜய். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்பட்ட விஜய், அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு பலரும் வாழ்த்து சொன்ன அதே வேளையில், அவரது கட்சிப் பெயரில் இலக்கணப்பிழை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்கள்.

இதையடுத்து தனது கட்சியின் பெயரில் ' க்' ஐ சேர்த்து தமிழக வெற்றிக்கழகம்  எனத் திருத்திக் கொண்டார் விஜய்.


இதை தொடர்ந்து தனது கட்சியை விரிவாக்குவதற்காக தமிழக வெற்றிக்  கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. கூடிய விரைவில் தமது கட்சி சார்ந்த கொடி, சின்னம் ஆகியவை ஆகியவையும் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்திற்காக சேர்க்கை செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் அதிகளவானோர் தம்மை TVK கட்சியில் இணைத்துக் கொள்வதற்காக முயன்ற நிலையில் சர்வர் டவுன் ஆகியது.

எனினும் அடுத்த நாள் சுமார் 50 லட்சம் வரையிலான உறுப்பினர்கள் விஜயின் கட்சியில் இணைந்துள்ளார்கள். தற்போது வரை அந்தப் பயணம் சிறப்பாக தொடர்ந்து வருகிறது.


இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை விஜயினால் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனாலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை அது வதந்தி என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, உறுப்பினர் சேர்க்கை நிறுத்தம் என்ற தகவல் பொய்யானது. வதந்தி பரப்பி வருகின்றனர். ஏற்கனவே ஆன் லைன் செயலி மூலம் கட்சியில் உறுப்பினராக சேரலாம் என்று அறிவிக்கப்பட்ட ஆன்லைன் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.நாடாளுமன்ற தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் விதி அமலுக்கு வந்துவிட்டது. 

எனவே நேரடியாக மக்களை சந்தித்து, முகாம் அமைத்து நடைபெற்று வந்த உறுப்பினர் சேர்க்கை மட்டும் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. ஆன் லைனில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. சேர விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக கட்சியில் இணையலாம் எனது தமிழக வெற்றிக்  கழகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement