• Apr 26 2024

பெருமாள் பெயரைக் கெடுத்திட்டாங்க... கியாரா அத்வானி படத்திற்கு கிளம்பிய மாபெரும் எதிர்ப்பு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாகவே பாலிவுட் சினிமாவில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் தொடர்ந்து இந்து மதத்தினர் மனங்களை புண்படுத்தும் வகையில் கடவுள்களை இழிவுபடுத்தும் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழும்பிய வண்ணமே இருக்கின்றன.


மேலும் இந்துக் கடவுள்களை அவமதிக்கும் விதமாகவே அவர்கள் படங்களையும் விளம்பரங்களையும் எடுத்து வருவதாக கூறப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல், கியாரா அத்வானி மற்றும் புமி பெட்னேகர் ஆகியோர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள 'கோவிந்தா நாம் மேரா' படத்தின் உடைய படு கிளாமரான போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது கூடவே அந்த படத்தின் போஸ்டர்களை பார்த்து இந்துக்கள் பலரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.


அதாவது கோவிந்தா நாம் மேரா என டைட்டில் வைக்கப்பட்டு ஹீரோ விக்கி கெளஷல் நடுவே படுத்திருக்க கியாரா அத்வானி மற்றும் புமி பெட்னேகர் கவர்ச்சி உடையில் இரண்டு பக்கமும் படுத்துக் கொண்டிருக்கும் போஸ்டர் மற்றும் பாத்ரூமில் மூன்று பேரும் இருக்கும் போஸ்டர்கள் படு மோசமாக வெளியான நிலையில், பெருமாள் பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர் எனவும், மற்ற மதக் கடவுள் பெயர்களை வைத்து இப்படியொரு போஸ்டர் வெளியாகுமா எனவும் கேட்டு நெட்டிசன்கள் பலரும் விளாசி வருகின்றனர்.


அத்தோடு கோவிந்தாவின் ஹாட்டி ஒய்ஃப் என புமி பெட்னேகர் சோபாவிலன் மீது ஒட்டுமொத்த தொடையழகையும் காட்டியபடி படு கிளாமராக உட்கார்ந்து இருக்கும் போஸ்டரையும் ரசிகர்கள் வச்சு விளாசி வருகின்றனர். இதனால் தான் பாலிவுட் திரையுலகம் உருப்படாமல் போவதாகவும், தென்னிந்திய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை வாரிக் குவித்து வருவதாகவும் கூறி கமெண்ட் போட்டு வருகின்றனர்.


மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி இந்த படம் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளியாகிறது. அதுமட்டுமல்லாது இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து இந்து கடவுள்களை அவமதித்து வருவதாக பாலிவுட் ரசிகர்கள் கூறி இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement