• Jan 18 2025

மாரி செல்வராஜின் வாழ்க்கை திரைப்படம்... திரைக்கு வர தயாராகும் "வாழை"... சம்பவங்கள் உறுதி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் 2006 ல் தமிழ் திரையுலகில் நுழைந்தார் . உதவி இயக்குனராக இருந்த இவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மாரி செல்வராஜ் கடைசியாக மாமனன் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். 


இந்த சூழலில் அந்தப் படத்தின் கதை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் உள்ளிட்ட புத்தகங்களை எழுதி எழுத்தாளராகவும் ஜொலித்தவர். அதுமட்டுமின்றி ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் ஒரு காட்சியிலும் நடித்திருக்கிறார். ராமுக்கு மிக மிக நெருக்கமானவரும் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.


பல வருடங்கள் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது.


படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு திறமையான  படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது .

 

Advertisement

Advertisement