• Sep 22 2023

கனமழை காரணமாக நிறுத்தப்பட்ட "மறக்குமா நெஞ்சம்" இசைக் கச்சேரி நிகழ்ச்சி- ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசைப்புயல் என அனைவராலும் அறியப்படுபவர் ஏ.ஆர் ரகுமான். ஏனெனில் சினிமாவிற்கு வந்தவுடனேயே புயல் வேகத்தில் பிரபலமானார் ஏ.ஆர் ரகுமான். அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த இசையில் இருந்து முற்றிலும் மாறுதலான ஒரு இசையை ஏ.ஆர் ரகுமான் கொண்டு வந்தார்.


இவர் படங்களுக்கு இசையமைப்பதோடு, வெளிநாடுகளிலும், இந்தியாவில் உள்ள பல இடங்களிலும் தொடர்ச்சியாக இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 12ம் தேதி மாலை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் என்ற பகுதியில் "மறக்குமா நெஞ்சம்" என்ற தலைப்பில் அவருடைய இசை நிகழ்ச்சி நடக்கவிருந்தது.


இந்த நிகழ்ச்சிக்காக ஏர்.ஆர் ரகுமான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற அக நக பாடலை இரண்டு முன்னணி பாடகிகள் பயிற்சி எடுப்பதையும், ரகுமானின் குழு அதற்காக தயாராகி வரும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.


ஆனால் கடந்த ஒரு வார காலமாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருவதால், இன்று மாலை நடக்கவிருந்த "மறக்குமா நெஞ்சம்" இசைக்கச்சேரி நடக்காமல் போயுள்ளது. இதனால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.


எனது அன்பான நண்பர்களே,வானிலை மோசமாக இருப்பதினாலும், தொடர் மழையின் காரணமாகவும், எனது அன்புக்குரிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியத்தை மனதில் வைத்தும், அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படியும் இன்று நடக்கவிருந்த இசை கச்சேரி வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். மேலும் நமது உடல் நலமே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement