இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தின் வெற்றியால் ரஜினி உட்பட படக்குழுவினர் அனைவரும் செம குஷியில் இருக்கின்றனர். படம் வெளியாக முன்னரே ரஜினி இமயமலைக்குச் சென்றிருந்தார்.
இமயமலைக்கு சென்றிருந்தாலும் படத்தின் வெற்றியை கேள்விப்பட்டு நெல்சனுக்கு மெசேஜ் அனுப்பி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இன்னும் சில நாளில் ரஜினி வீடு திரும்புவார் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
ரஜினியின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் பற்றி சொல்லவே தேவையில்லை. அந்தளவிற்கு திரையரங்குகளில் ரஜினியின் ஒவ்வொரு அசைவையும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர் .இந்நிலையில் 'ஜெயிலர்' ரிலீசுக்கு முன்பாக பேட்டி எதுவும் கொடுக்காமல் இருந்த இயக்குனர் நெல்சன், படத்தின் ரிலீசுக்கு பின்பு பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கழுகு காகம் என்று பேசியிருந்தார். இது குறித்து நெல்சனிடம் கேட்ட போது நெல்சன் அதை விஜய்யை வைத்து சொல்லவில்லை. அந்த டைம்ல் என்ன தோனிச்சோ அதை தான் சொன்னாரு. சினிமாவில் நிறைய காலமாக இருக்கிறாங்க அவங்களுக்குள்ள அப்பிடியொரு பாகுபாடு இல்லை.என்ன சொன்னாலும் பிரச்சினை என்றால் அப்போ என்ன தான் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!