• Apr 27 2024

நடுநடுங்க வைக்கும் மம்முட்டியின் நடிப்பு! இப்படியும் ஒரு மனிதர் நடிப்பாரா? பாசிட்டி விமர்சனங்களை குவித்த பிரமயுகம் படம் எப்படி.?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

மம்முட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் திகில் கதையாக உருவாகிய திரைப்படம் தான் பிரமயுகம்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை பார்த்த அனைவரும், பாசிட்டிவான விமர்சனங்களை தான் கொடுத்து வருகிறார்கள்.

19ஆம் நூற்றாண்டு கதையாக தொடங்கும் இந்த படத்தில், மம்மூட்டி நடிப்பு நடுநடுங்க வைப்பதாக காட்டப்படுகிறது. முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை பாணியில் வெளிவந்த இந்த படத்தின்  விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

கேரளா வடக்கு பகுதியில் நடக்கும் போரின் காரணமாக அரண்மனையில் பாட்டு பாடும் தேவன் என்ற ஒருவர் காட்டுப்பகுதிக்குள் ஓடுகிறார்.

அங்கு, மம்முட்டி (கொடுமன் போட்டி) தன் சமையல்காரருடன் வாழ்ந்து வருகிறார். அவரிடம் அடைக்கலம் கேட்கும் தேவன், அங்கிருந்து வெளியே செல்ல முயற்சிக்கும்போது பல அமானுஷ்யங்களை சந்திக்க நேரிடுகின்றது.


அவ்வாறு குறித்த அமானுஷ்யங்களில் இருந்து அவர் வெளியே  வந்தாரா? கொடுமன் போட்டி யார்? அந்த அரண்மனையின் வரலாறு என்ன? மம்முட்டி அவரை காப்பாற்றினாரா? போன்ற பல கேள்விக்கு விடையாக அமைகிறது தான் பிரமயுகம்.

இந்த கதை களத்தில் கருவை மையப்படுத்தி மம்முட்டியின் மிரட்டலான நடிப்பை வித்தியாசமான முறையில் கொடுத்திருக்கும் இயக்குநரை முதலில் பாராட்ட  வேண்டும்.

இந்த படத்தில் மம்முட்டியின் நடிப்புதான் உயிர் நாடியாக உள்ளது. இப்படியும் ஒரு மனிதன் நடிப்பாரா? என்று வியக்க வைக்கும் அளவுக்கு கொடுமை போட்டியாக வாழ்ந்துள்ளார்.


மம்முட்டியின் கம்பீரமான குரலும், மிரள வைக்கும் சிரிப்பும், தோரணை நடிப்பும் ஒவ்வொரு சீனிலும் அந்த படத்திற்கு வலு சேர்த்து உள்ளது. முழுக்க முழுக்க இந்த திரைப்படம் வித்தியாசமானது தான். புது உணர்வை பார்ப்போருக்கு  கொடுத்துள்ளது.

அதிலும் இந்த படத்தில் வரும் இசை, திகில், மர்மம் போன்ற ஒன்றுக்கும் பார்ப்பவர்களை நடுநடுங்க வைத்துள்ளது.

அதேபோல கேமரா ஒளி, ஒலிப்பதிவும் பழங்கால அரண்மனையை  அப்படியே கண் முன்னே காட்டிய விதமும், கலை நுணுக்கங்களும் மிகப்பெரிய பக்கபலமாக இருந்துள்ளது.

இந்த படத்தின் முதல் பாதியிலேயே இயக்குநர் கதை எடுத்துச் சொன்ன விதம் நம்மை படத்தோடு ஒன்றிக்க வைத்து விடுகிறது.

அதைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் காட்டப்படும் சஸ்பென்ஸும்  சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இந்த படத்தை பார்ப்போருக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement